நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!

செய்திகள் 27-Oct-2014 9:00 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு காலத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டிய புண்ணிய பூமியல்லவா இது... இப்போது நடிகர் விஜய்க்கு சிலை வைத்து சிறப்பித்திருக்கிறார்கள் ‘இளையதளபதி’ ரசிகர்கள். ஃபேஸ்புக்கில் நீண்டகாலமாக இயங்கிவரும் விஜய் ஃபேன்ஸ் கிளப் எனும் பக்கத்தை நடத்திவரும் ‘போக்கிரி’ சபரி என்பவர் தலைமையில் 40 கல்லூரி மாணவர்கள் இணைந்து தங்கள் தலைவன் விஜய்யின் புகழை உலகமெங்கும் பரப்பவும், அவர்மீது தாங்கள் வைத்திருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்தவும் அவர் போன்ற சிலையை உருவாக்கியிருக்கிறார்களாம். இந்த சிலை ‘தலைவா’ படத்தில் விஜய் நடித்த ‘விஷ்பா பாய்’ கேரக்டரின் உருவத்தை மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

விஜய்யின் இந்த முழு உருவச் சிலையை கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கிறார்களாம். தற்போது ‘கத்தி’ திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கத்தில் இந்த சிலை, ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறதாம்.

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய்க்கு சிலை வைப்பது குறித்து ஆலோசித்து வந்தார்களாம் மேற்படி ரசிகர்கள். ஆனால், தற்போதுதான் அது சாத்தியமாகியிருக்கிறதாம். இந்த சிலை மேட்டர் நடிகர் விஜய்க்கு இதுவரை தெரியாதாம். தற்போது மீடியாக்களில் இதுகுறித்து பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதால் நிச்சயம் அவருக்கு தெரிந்திருக்கும் என்கிறார்கள் ‘இளையதளபதி’யின் நெஞ்சில் குடியிருக்கும் அபிமானிகள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;