‘ஜில்லா’வைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணையும் வித்யூலேகா!

‘ஜில்லா’வைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணையும் வித்யூலேகா!

செய்திகள் 25-Oct-2014 4:42 PM IST Chandru கருத்துக்கள்

இந்த வருட பொங்கலுக்கு வெளியான ‘ஜில்லா’ படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாகயும், ‘வீரம்’ படத்தில் சந்தானத்தின் காதலியாகவும் நடித்திருந்தார் வித்யூலேகா ராமன். இப்போது மீண்டும் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது அம்மணிக்கு. தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்திலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘காக்கிச்சட்டை’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் வித்யூலேகா. இதனைத் தொடர்ந்து ‘விஜய் 58’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில் ‘ஃபேன்டஸி’ படமாக உருவாகவிருக்கும் இந்த ‘விஜய் 58’க்காக ஈசிஆர் ரோட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான செட்டில் வரும் நவம்பரில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இசைக்கு தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவுக்கு ‘நட்டி’ நட்ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். படத்தை விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமாரும், ‘தமீன் ரிலீஸ்’ ஷிபுவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;