‘லிங்கா’, ‘அனேகன்’, ‘தல55’ ‘ஐ’ - நவம்பர் ஸ்பெஷல்

‘லிங்கா’, ‘அனேகன்’, ‘தல55’ ‘ஐ’ - நவம்பர் ஸ்பெஷல்

செய்திகள் 25-Oct-2014 4:30 PM IST Chandru கருத்துக்கள்

தீபாவளியை முன்னிட்டு புதன் கிழமையே (அக் 22) ‘கத்தி’யும் ‘பூஜை’யும் வெளியானதால், இந்த வெள்ளிக்கிழமை (அக் 24) வேறு எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப்பதால் அடுத்த வெள்ளிக்கிழமையான அக்டோபர் 31ஆம் தேதியும் பெரிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை.

நவம்பர் மாத முதல் வெள்ளிக்கிழமையான 7ஆம் தேதி கண்ணன் இயக்கத்தில் விமல், சூரி, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படம் ரிலீஸாகிறது. அதனைத் தொடர்ந்து வரும் அடுத்த வெள்ளிக்கிழமையான நவம்பர் 14ஆம் தேதி வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’ படமும், ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்திருக்கும் ‘திருடன் போலீஸ்’ படமும் திரைக்கு வரவிருக்கிறது. இதே நாளில் ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்களாம். அதேபோல் நவம்பரின் கடைசி வெள்ளிக்கிழமையான 28ஆம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறதாம். இப்படத்திற்கு தமிழகத்திலுள்ள பெரும்பாலான தியேட்டர்கள் மேற்படி தேதிக்கு இப்போதே ‘பிளாக்’ செய்யப்பட்டிருப்பதால் இதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான நவம்பர் 21ஆம் தேதியும் பெரிய படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் ‘அனேகன்’ படத்தின் இசை வெளியீடும் நவம்பரில்தான் நடக்கவிருக்கிறதாம். எந்த தேதி என்பதை மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லையாம். அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இன்னொரு படமான ‘தல55’ படத்தின் பாடல்களும் நவம்பரில் வெளிவரும் என ஏற்கெனவே இயக்குனர் கௌதம் மேனன் அறிவித்திருக்கிறார்.

ஆக... வரும் நவம்பரில் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து காத்திருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;