ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம்!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம்!

செய்திகள் 25-Oct-2014 3:52 PM IST Chandru கருத்துக்கள்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘டாக்டர் பட்டம்’ பெறுவது ஒன்றும் புதிதல்ல. தற்போது பாஸ்டனிலுள்ள ‘பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக்’ அவருக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. அதோடு இந்தியாவிலிருந்து இந்த கல்லூரிக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு ரஹ்மான் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க உள்ளதாகவும் ‘பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக்’ தெரிவித்துள்ளது. நேற்று (அக். 24) பாஸ்டனிலுள்ள அந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து இசைக் கச்சேரி ஒன்றையும் நடத்தியுள்ளார் ரஹ்மான். விழாவின் நிறைவுப் பகுதியாக ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;