கேரளாவில் ‘கத்தி’க்கு நஷ்டமா?

கேரளாவில் ‘கத்தி’க்கு நஷ்டமா?

செய்திகள் 25-Oct-2014 3:07 PM IST Chandru கருத்துக்கள்

தீபாவளியன்று திரைக்கு வந்த ‘கத்தி’ படம் முதல் நாளில் மட்டும் 23.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் சந்தோஷத்தில் இருக்கிறது ‘கத்தி’ டீம். ஆனால், இப்படம் வெளியான கேரளாவில் 1 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று விநியோகஸ்தர்கள் கூறியதாக சில முன்னணி இணையதளங்களில் செய்தியாகி வருகின்றது. அதாவது தீபாவளியன்று இப்படம் கேரளாவில் 120 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, 1 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாகவும், ஆனால் இரண்டாம் நாளான வியாழக்கிழமை 50 லட்சத்திற்கும் குறைவாகவே வசூல் செய்திருப்பதாகவும், இதனால் இப்படம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் அதில் குறிபிடப்பட்டிருக்கிறது.

இதனைப் பற்றி கேரளாவில் இருக்கும் டிரேட் அனலிஸ்ட் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கத்தி திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை சுமார் 4.5 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக பெரிய ஹீரோக்களுடைய தமிழ் படங்களின் கேரள உரிமை 2 கோடியிலிருந்து 2.5 கோடி வரைக்கும்தான் விற்கப்படும். ஆனால், சமீபகாலமாக இந்த தொகை 4 கோடிக்கும் அதிகமாகிவிட்டது. சமீபத்தில் வெளியான ‘அஞ்சான்’ படமும் 4 கோடிக்கும் மேல் விலை கொடுத்து வாங்கியதால் நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், ‘கத்தி’யைப் பொறுத்தவரை தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. நேற்றும், இன்றும் சற்று வசூல் குறைவாக இருந்தாலும் நாளை விடுமுறை என்பதால் மீண்டும் வசூல் உயர வாய்ப்பிருக்கிறது. எனவே நஷ்டம் வரும் என்பதை இப்போதே சொல்ல முடியாது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;