மதுரை பின்னணியில் இன்னொரு படம்!

மதுரை பின்னணியில் இன்னொரு படம்!

செய்திகள் 25-Oct-2014 2:44 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் மதுரை பின்னணியில் எடுக்கப்பட்டு ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் விரைவில் ரிலீசாகவிருக்கும் மற்றொரு படம் ‘போர்க்குதிரை’. ஸ்ரீபிரவீன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் சைதன்ய கிருஷ்ணன் கதையின் நாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘‘இப்படம், 1980-களில் காதல் எந்த அளவுக்கு உன்னதமாக இருந்தது என்பதையும், குடும்பங்களில் அண்ணன், தங்கை, அம்மா, அப்பா பாசம் எந்த அளவுக்கு இணக்கமாக இருந்தது என்பதையும் வலியுறுத்தும். ஒரு அப்பாவி இளைஞனுக்கும், அராஜக காரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமே ‘போர்க்குதிரை’ படம்’’ என்கிறார் இப்படத்தை இயக்கும் ஸ்ரீபிரவீன். படத்தின் கதை 1980-களில் நடப்பது மாதிரி என்பதால் உடைகள், இடங்கள், பொருட்கள், பாடல்கள் என அனைத்தும் அந்த காலகட்டத்திற்கு உரிய வகையில் அமைத்துள்ளதாக கூறுகிறார் இயக்குனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை விஸ்வா கவனிக்க, பரத், நந்தன் இருவர் இணைந்து இசை அமைக்கிறார்கள். இப்படத்தை, ‘மெயின் ஸ்டிரீம் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ஸ்ரீபிரவீன் குமார் ரெட்டி தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கட்டப்பாவ காணோம் - டீசர்


;