மணிரத்னத்தின் 50 நாள் திட்டம்!

மணிரத்னத்தின் 50 நாள் திட்டம்!

செய்திகள் 25-Oct-2014 12:55 PM IST VRC கருத்துக்கள்

‘கடல்’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மணிரத்னம், வழக்கமாக ஒரு படத்தை எடுத்து முடிக்க அதிக நாட்களை எடுத்துக் கொள்வார். ஆனால் இப்படத்தை பொறுத்தவரையில் 50 நாட்களில் எடுத்து, சீக்கிரமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்! துல்கர் சல்மான், நித்யா மேனன் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கனிகா ஆகியோரும் நடிக்க, இப்படத்திற்கு ‘ஓகே கண்மணி’ என்று டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை தயாரிப்பு தரப்பினர் இன்னும் உறுதி செய்யவில்லை. இப்படம், ‘அலைபாயுதே’ படப் பாணியில் காதல் கதையாக உருவாகி வருகிறது என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தின் பாடல் கம்போசிங் வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ‘அலைபாயுதே’ படத்திற்கு பிறகு பி.சி.ஸ்ரீராம் மீண்டும் இப்படத்தின் மூலம் மணிரத்னத்துடன் இணைந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - வான் வருவான் பாடல் ப்ரோமோ


;