அக்டோபர் 30 முதல் ‘ரஜினி முருகன்’

அக்டோபர் 30 முதல் ‘ரஜினி முருகன்’

செய்திகள் 25-Oct-2014 12:34 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘காவல்காரன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 30-ஆம் தேதி காரைக்குடியில் துவங்கவிருக்கிறது. ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க, டி.இமான் இசை அமைக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும், பொன்ராமும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;