இன்னொரு மெட்ராஸ் படம்!

இன்னொரு மெட்ராஸ் படம்!

செய்திகள் 25-Oct-2014 11:50 AM IST VRC கருத்துக்கள்

‘ரெட் கார்பெட்’ நிறுவனம் சார்பில் எம்.நடராஜன், என்.ரமேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'நகர்வலம்'. இப்படத்தில், கதையின் நாயகனாக 'காதல் சொல்ல வந்தேன்' பாலாஜி, நடிக்க, புதுமுக நாயகியாக தீக்ஷிதா நடிக்கிறார். இப்படத்தை இயக்கி வரும் மார்க்ஸ் படம் குறித்து பேசும்போது,

" சென்னை நகரில், குடிநீர் விநியோகிக்கும் மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரான நாயகன் , பல ஏரியாகளுக்கு குடிநீர் விட செல்லுகையில், ஓர் ஏரியாவின் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் உண்டாகும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான் இப்படத்தின் கதை. அதனை சென்னை மக்களின் வாழ்வியலுடன் கலந்து யதார்தமாகவும், சுவாரஸ்யமாகவும் திரைகதை அமைத்து, படமாக்கப்பட்டுள்ளது " என்றார் .

இதில் சென்னை பூர்வீக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக கானா பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதனை 'கானா புகழ்' இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். சென்னை நகரின் நெருக்கடி மிகுந்த பகுதிகளான அண்ணா நகர், சைதாபேட்டை, கே.கே.நகர், கண்ணகி நகர், ஹௌசிங் போர்டு ஏரியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை தமிழ் தென்றல் கவனிக்க, பவன் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நகர்வலம் - டீசர்


;