ஒரே நாளில் 38 கோடி... சாதித்த ஷாரூக்!

ஒரே நாளில் 38 கோடி... சாதித்த ஷாரூக்!

செய்திகள் 25-Oct-2014 10:55 AM IST Chandru கருத்துக்கள்

இதுவரை வெளிவந்த எல்லா இந்திய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையையும், ஒரு நாள் வசூல் சாதனையையும் முறியடித்திருக்கிறது ஷாரூக் கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், சோனு சூட் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஹிந்தி படமான ‘ஹேப்பி நியூர் இயர்’. நேற்று இப்படம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 4500 திரையரங்குகளில் வெளியானது. அதேபோல் வெளிநாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது. ஏற்கெனவே சல்மானின் ‘கிக்’ மற்றும் அமீர் கானின் ‘தூம் 3’ ஆகிய திரைப்படங்களைப் போல இந்த ‘ஹேப்பி நியூ இயரு’ம் உலகமெங்கும் கிட்டத்தட்ட 5000த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்ததால் முதல் நாளில் மட்டும் இப்படம் கிட்டத்தட்ட 38 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். இதற்கு முன்பு முதல் நாளில் அதிக கலெக்ஷன் செய்த படமாக ‘தூம் 3’ இருந்து வந்தது. அதன் முதல் நாள் வசூல் மட்டும் 32 கோடி ரூபாய். அதேபோல் ஒரு நாளில் அதிக கலெக்ஷன் செய்த படம் (3ம் நாளில் 34 கோடி) என்ற சாதனையையும் ‘தூம் 3’ வசம் இருந்தது. தற்போது அந்த சாதனையையும் முறியடித்திருக்கிறது ‘ஹேப்பி நியூ இயர்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவண் - Happy New Year பாடல் மேக்கிங்


;