‘‘இதான்டா உண்மையான ஹிட்!’’ - உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்

‘‘இதான்டா உண்மையான ஹிட்!’’ - உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்

செய்திகள் 25-Oct-2014 9:48 AM IST Chandru கருத்துக்கள்

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ், தான் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். தனுஷின் கேரியரில் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. ஜூலை 18ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு முதல் நாளே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வேலையில்லா பட்டதாரி படத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்து வந்தனர். குறிப்பாக நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு படத்திற்கு ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ தியேட்டருக்கு வந்தார்கள் என்றால் அது நிச்சயம் ‘விஐபி’க்காகத்தான் இருக்கும்.

25 நாட்கள், 50 நாட்கள் என வரிசையாக சாதித்த இப்படம் தற்போது 100 நாள் என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறது. ‘‘இது வெறும் நாள் கணக்குக்காக ஓட்டப்பட்ட படமல்ல... நிஜமாகவே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு 100 நாள் ஓடக்கூடிய அத்தனை தகுதிகளும் இருக்கிறது’’ என்கிறார் இப்படம் 100 நாள் ஓடிய தியேட்டர் அதிபர் ஒருவர். உண்மைதான்... இன்றைய சூழலில் எவ்வளவு சூப்பரான படமாக இருந்தாலும் 50 நாட்களைத் தாண்டுவதே கஷ்டம்தான். இப்படியொரு சூழ்நிலையில் அனைவராலும் வெற்றிப்படம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘வேலையில்லா பட்டதாரி’ படம் 100 நாட்களைத் தொட்டிருப்பது தனுஷ் ரசிகர்களை ‘‘இதான்டா உண்மையான ஹிட்!’’ என உற்சாகத்தில் மிதக்க வைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;