‘என் வழி தனி வழி’யில் ஆர்.கே.

‘என் வழி தனி வழி’யில் ஆர்.கே.

செய்திகள் 24-Oct-2014 12:54 PM IST VRC கருத்துக்கள்

‘எல்லாம் அவன் செயல்’ படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்.கே.யும், இயக்குனர் ஷாஜி கைலாசும் இணைந்துள்ள படம் ’என் வழி தனி வழி’. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தில் ஆர்.கே.யுடன் பூனம் கௌர், மீனாக்‌ஷி தீட்சித் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, ‘தலைவாசல்’ விஜய், தம்பி ரமையா, சிங்கமுத்து என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து ஆர்.கே.கூறும்போது, ‘‘காவல்துறை சம்பந்தப்பட்ட கதை. இதனை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளோம்! ‘எல்லாம் அவன் செயல்’ படம் வந்தபோது என்னை எல்லோரும் வக்கீல் என்றே நினைத்தார்கள்! அதைப்போல இப்படம் வெளிவந்தால் என்னை ஒரு ஐ.பி.எஸ்.அதிகாரி என்று சொல்ல வைக்கும் விதமாக இதில் என்னுடைய கேரக்டர் அமைந்துள்ளது. நல்ல கதை களம், ஜோர்டான், இஸ்ரேல் என பல நாடுகளில் கதை பயணிக்கும்.
‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் வண்டு முருகனாகவும், மற்றும் ‘அழகர் மலை’யிலும் என்னுடன் நடித்த வடிவேலுவை ஏன் இப்படத்தில் நடிக்க வைக்கவில்லை? என்று கேட்டீர்கள்!
‘‘வடிவேலு ஹீரோவாகி விட்டார். அப்புறம் எப்படி? இந்தப் படத்தில் அவரது இடத்தை தம்பி ராமையாவும், சிங்கமுத்துவும் சேர்ந்து நிரப்பியிருக்காங்க. நிச்சயமா சொல்றேன், இந்த படத்தோட காமெடியும் காலம் காலமாக நிலைத்து நிற்கிற மாதிரி சூப்பரா அமைந்திருக்கு. ரஜினி சார் பேசிய வசனத்தை படத்துக்கு தலைப்பாக்கியிருக்கீங்களேன்னும் நிறைய பேர் கேட்டாங்க! இது ரஜினி சார் மட்டும் பேசின வசனம் கிடையாது, அதற்கு முன்னதாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் இதை வசனமாக பேசியிருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்த பிரபலமான ஒரு தலைப்பு படத்திற்கு இருந்தால் அது மக்களிடையே மேலும் ரீச் ஆகும் என்பதற்காக இந்த டைட்டிலை வைத்திருக்கிறோம்’’ என்று தன் பட டைட்டிலுக்கு விளக்கமும் சொன்ன ஆர்.கே., ‘என் வழி தனி வழி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பெரிய அளவில், அதாவது அனைவரையும் பேச வைக்கும் விதமாக நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்கிட்ட மோதாதே - டிரைலர்


;