வசூல் மழையில் ‘கத்தி’,‘ பூஜை’

வசூல் மழையில் ‘கத்தி’,‘ பூஜை’

செய்திகள் 24-Oct-2014 12:08 PM IST Top 10 கருத்துக்கள்

பல பிரச்சனைகளை தாண்டி வந்து, தீபாவளியன்று வெளியான விஜய்யின் ‘கத்தி’ திரைப்படமும், விஷாலின் ‘பூஜை’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி ரிலீசாக இந்த இரண்டு படங்களே வெளியாகியுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல வசூல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய்யின் ‘கத்தி’ முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக ஒரு புள்ளி விவர கணக்கு கூறுகிறது. அதைப்போல விஷாலின் ‘பூஜை’ முதல் நாளிலேயே 4 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ‘கத்தி’யும், விஷாலின் ‘பூஜை’ படமும் வசூலில் சாதனை படைக்கும் என்றே கூறப்படுகிறது. விஷாலின் ‘பூஜை’ தமிழகத்தில் வெளியிட்டதை விட அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ஆந்திராவில் வெளியிட்டுள்ளனர். தமிழ் ரசிகர்களை விட ஆந்திரா ரசிகர்களிடையே ‘பூஜை’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓரிரு நாட்களில் இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வசூல செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;