பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மரணம்!

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மரணம்!

செய்திகள் 24-Oct-2014 11:28 AM IST VRC கருத்துக்கள்

பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் (வயது 86) சென்னையில் இன்று காலையில் காலமானார். சமீபத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மயிலாப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கவலைக்கிடமான நிலையில் இருந்த அவருக்கு அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த்து. இந்நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி இன்று காலமானார். தமிழில் ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘ரத்தக்கண்ணீர்’, ‘முதலாளி’ உட்பட 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர், சில திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அரசியலிலும் நல்ல அனுபவம் உள்ள எஸ்.எஸ்.ராஜேந்திரன் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டு மக்களுக்காக அரும் பணிகளை செய்துள்ளார். தமிழ் நடிகர்களில் முதன் முதலாக எம்.எல்.ஏ.ஆனவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவரது இழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் இழப்பு என்றே சொல்லலாம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;