தொடங்கியது ‘கத்தி’ ரிசர்வேஷன்... ரசிகர்கள் உற்சாகம்!

தொடங்கியது ‘கத்தி’ ரிசர்வேஷன்... ரசிகர்கள் உற்சாகம்!

செய்திகள் 21-Oct-2014 1:19 PM IST Chandru கருத்துக்கள்

அப்பாடா... ஒரு வழியாக ‘கத்தி’ படம் நாளை வெளிவருவது உறுதியாகிவிட்டது. சற்று நேரத்திற்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர்களின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ‘கத்தி’ படம் வெளிவருவதை உறுதியாக்கியிருக்கிறார்கள். நடிகர் விஜய்யும் இதுகுறித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சென்னையிலுள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் சில நிமிடங்களுக்கு முன்பு ரிசர்வேஷன் ஆரம்பமாகியுள்ளது. காலை 7.30 மணி முதல் ‘கத்தி’ சிறப்புக் காட்சிக்கான முன் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் தமிழகத்தின் மற்ற எல்லா திரையரங்குகளிலும் முன்பதிவு ஆரம்பமாகிவிடும். காலை 5 மணி முதல் சிறப்புக் காட்சிகள் திரையிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கடந்த சில நாட்களாக நடந்து வந்த பிரச்சனைகளால் ‘கத்தி’ படத்திற்கு தற்போது உலகமெங்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ‘கத்தி’ முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 440 தியேட்டர்களில் ‘கத்தி’ ரிலீஸ் செய்யப்படுகிறதாம். உலகம் முழுவதும் ‘கத்தி’ படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;