மோசடி நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா !

மோசடி நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா !

செய்திகள் 21-Oct-2014 12:18 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் இளையராஜாவின் பாடல்களை முறைகேடாக பயன் படுத்திவந்த மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் உட்பட இன்னும் சில நிறுவனத்திற்கும் சென்னை உயர் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்தும் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்தினரால தன் ரசிகர்கள் பாதிக்கக் கூடாது என்று தன் ரசிககர்களுக்கு இளையராஜா ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதன் விவரம் வருமாறு.

“உலகம் முழுதும் வசித்து வரும் அன்பான என் ரசிகர்களே, நான் இசைமைத்த பலவேறு படங்களின் பாடல்களை மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் என் அனுமதி இல்லாமல் முறைகேடாக விற்பனை செய்து வருகி்றார்கள்.

இப்படி பல ஆண்டுகளாக விற்று வரும் அகி நிறுவனம் எனக்கு சேர வேண்டிய ராயல்டியையும் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது. இதனால் எனக்கு பெரிய அளவில் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றம் அகிலன் லட்சுமணன் நிறுவனத்திற்கு தடை உத்தரவு போட்டிருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து பாடல்களை விற்பனை செய்து வருவதாக அறிகிறேன்.

அதனால் ரசிகர்கள் யாரும் அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யும் என் பாடல்களின் சிடிகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது பாடல்களின் அதிகாரப்பூர்வ விற்பனை நிறுவனம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். அதுவரை ஐட்யூனிலும் எனது பாடல்கள் எதையும் தரவிறக்கம் (Download) செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இளையராஜா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

C2H பற்றி சினிமா பிரபலங்கள் - வீடியோ


;