‘கத்தி’ குறித்து விஜய் பரபரப்பு அறிக்கை!

‘கத்தி’ குறித்து விஜய் பரபரப்பு அறிக்கை!

செய்திகள் 21-Oct-2014 11:42 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ நாளை வெளியாகுமா இல்லையா என ஒவ்வொரு ரசிகர்களும் நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து இதுவரை எதுவும் கருத்துக்கூறாத நடிகர் விஜய், அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை தனது பி.ஆர்.ஓ. பி.டி.செல்வகுமார் மூலம் வெளியிட்டிருக்கிறார். அது அப்படியே இங்கே...

மாண்புமிகு அம்மாவுக்கு நன்றி!
ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம்!

சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் ‘கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொண்டனர். எனவே, இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது. எனவே எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் ‘கத்தி’ திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

‘கத்தி’ திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கும், தமிழக காவல்துறைக்கும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;