இறுதிகட்ட பேச்சுவார்த்தை.... ‘கத்தி’ ரிலீஸ் எப்போது?

இறுதிகட்ட பேச்சுவார்த்தை.... ‘கத்தி’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 21-Oct-2014 11:28 AM IST Chandru கருத்துக்கள்

நாளை வருமா வராதா என படபடப்பில் இருக்கும் ‘இளையதளபதி’ ரசிகர்களை இளைப்பாற்றும் வகையில் தற்போது செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. நேற்று இரவு முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட பிறகு, சென்னை சத்யம், உதயம், உட்லண்ட்ஸ் உட்பட ஒரு சில திரையரங்கங்களில் மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. பெட்ரோல் வெடிகுண்டுகளும் வீசப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், ‘கத்தி’ பட ரிலீஸ் குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காக தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இன்னும் சிறிது நேரத்தில் கலந்தாலோசிக்க இருக்கிறார்களாம். இந்த கூட்டத்திற்குப் பிறகு ‘கத்தி’ ரிலீஸ் குறித்து இறுதி அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. அனேகமாக மதியம் 2 மணிக்குள் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;