மஞ்சுவாரியர், ஜோதிகாவை தொடர்ந்து கஜோல்!

மஞ்சுவாரியர், ஜோதிகாவை தொடர்ந்து கஜோல்!

செய்திகள் 21-Oct-2014 11:23 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’. திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர் ரீ-என்ட்ரியாகி நடித்த இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, அவருக்கு இப்படம் மூலம் மேலும் நல்ல பெயர் கிடைத்தது. இப்படம் ஜோதிகா நடிப்பில் தமிழிலும் ரீ-மேக்காகிறது. மலையாள ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இப்படத்தை இயக்க, சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, மஞ்சு வாரியரை போன்று இப்படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரியாகிறார். அடுத்து ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. ஹிந்தியில் இப்படத்தை நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்க, அவரது மனைவி கஜோல் நடிக்க இருக்கிறார். அஜய் தேவ்கனை திருமணம் புரிந்துகொண்ட பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த கஜோல் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் ரீ-எண்ட்ரியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு படத்தின் மூலம் மூன்று பிரபல ஹீரோயின்கள் சினிமாவில் ரீ-என்ட்ரியாவது இதுதான் முதல் முறையாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - அடி வாடி திமிரா பாடல்


;