சிவகார்த்திகேயனுக்கு இது ஸ்பெஷல் தீபாவளி... தெரியுமா?

சிவகார்த்திகேயனுக்கு இது ஸ்பெஷல் தீபாவளி... தெரியுமா?

செய்திகள் 21-Oct-2014 11:07 AM IST Top 10 கருத்துக்கள்

மழையோடு மழையாக கிடைக்கிற ‘கேப்’பில் வெடி வைத்து தீபாவளியை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறது தமிழகம். ஸ்வீட், புத்தம் புதிய ஆடைகள், புதுப்பட ரிலீஸ் என தீபாவளிக்காக நிறைய விஷயங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. ரசிகர்களைப் போலவே, சினிமா பிரபலங்களும் ஒவ்வொரு தீபாவளியையும் உற்சாகமாக கொண்டாடுவது வாடிக்கை.

குறிப்பாக, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த வருட தீபாவளி ரொம்பவே ஸ்பெஷல். அதற்கு காரணம் அவருடைய செல்ல மகள் ஆராதனாவுக்கு நாளை (அக்டோபர் 22) தீபாவளி அன்றுதான் முதல் பிறந்தநாள் வருகிறது. ஆகவே இரண்டு விழாக்களையும் சேர்த்து வைத்துக் கொண்டாட சந்தோஷமாக காத்துக் கொண்டிருக்கிறது சிவகார்த்திகேயனின் குடும்பம். காலையில் தீபாவளி கொண்ட்டாட்டம், மாலையில் ஆராதனாவின் பிறந்தநாள் கொண்ட்டம் என ‘பலே’ திட்டத்துடன் திருச்சியில் இருக்கும் தனது அம்மா, அக்கா குடும்பங்களுடன் தீபாவளியை கொண்டாட இருக்கிறாராம் ‘காக்கிச்சட்டை’யின் க்ரைம் பிராஞ்ச் ஆபிஸர் சிவகார்த்திகேயன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - டிரைலர்


;