தீபாவளிக்குப் பிறகு வெளிநாடு பறக்கும் ‘லிங்கா’ டீம்!

தீபாவளிக்குப் பிறகு வெளிநாடு பறக்கும் ‘லிங்கா’ டீம்!

செய்திகள் 21-Oct-2014 10:44 AM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு, ஒரு பாடல் தவிர எல்லாம் முடிந்து விட்டது. நேற்று முன் தினம் ரஜினிகாந்த், சோனாக்‌ஷி சின்ஹா கலந்துகொண்ட ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. அடுத்து படமாக்கவுள்ள பாடல் காட்சி ரஜினியின் அறிமுக பாடலாம். இப்பாடலை பிரான்ஸ், இத்தாலி, ஹாங்காங் ஆகிய நாடுகளில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர் என்றும் இதற்காக ‘லிங்கா’ படக் குழுவினர் தீபாவளிக்குப் பிறகு வெளிநாடு பறக்கவிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்க, இதற்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைக்கவிருக்கிறார். இதற்கிடையில் ரஜினிகாந்த் தனது போர்ஷனுக்கான டப்பிங் வேலைகள் பெரும்பாலும் முடித்துக் கொடுத்து விட்டாராம், இன்னும் ஒரு நாள் டப்பிங் பேசினால் மொத்த டப்பிங் வேலையும் முடிந்து விடுமாம். ஏற்கெனவே அறிவித்தபடி இப்படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, ‘லிங்கா’வின் வேலைகளை மேலும் சுறுசுறுப்பாக்கியிருக்கிறாராம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;