‘கத்தி’ போஸ்டரில் வெளியேறிய ‘லைகா’... வெளியிடுவது யார்?

‘கத்தி’ போஸ்டரில் வெளியேறிய ‘லைகா’... வெளியிடுவது யார்?

செய்திகள் 20-Oct-2014 5:58 PM IST VRC கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் ரிலீஸ் பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும்போலத் தோன்றுகிறது. தற்போது நாளை வெளிவரவிருக்கும் ‘கத்தி’ பத்திரிகை விளம்பர போஸ்டர், நடிகர் விஜய்யின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த போஸ்டரில் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனத்தின் லோகோ இடம் பெறவில்லை. எனவே, எதிர்பார்ப்பாளர்களின் கருத்திற்கேற்ப ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் ‘கத்தி’யை வெளியிடவில்லை என்றால், வேறு எந்த நிறுவனத்தின் கீழ் இப்படத்தை வெளியிடுகிறார்கள் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. அனேகமாக இன்னும் சிறிது நேரத்தில் ‘கத்தி’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

எது எப்படியோ தீபாவளிக்கு ‘கத்தி’ ரிலீஸானாலே போதும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;