மீண்டும் இணையும் ‘விஐபி’யின் சூப்பர்ஹிட் கூட்டணி!

மீண்டும் இணையும் ‘விஐபி’யின் சூப்பர்ஹிட் கூட்டணி!

செய்திகள் 20-Oct-2014 5:21 PM IST Chandru கருத்துக்கள்

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக களமிறங்கிய வேல்ராஜ் தனது முதல் படத்திலேயே சூப்பர்ஹிட் வெற்றியைச் சுவைத்தார். ‘வேலையில்லா பட்டதாரி’ படம் தனுஷிற்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு இப்படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றன. தற்போது இந்த கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவிருக்கிறது. இயக்குனர் வேல்ராஜ் கூறிய ‘ஒன்லைன் ஸ்டோரி’ தனுஷிற்கு மிகவும் பிடித்துவிட்டதால் நடிப்பதற்கு உடனே கால்ஷீட் ஒதுக்கிவிட்டாராம். தற்போது இந்த ‘ஒன்லைனை’ வைத்து திரைக்கதை அமைக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார் வேல்ராஜ். மற்ற விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் பாடல் வீடியோ


;