‘ஐ’ டீஸர் சாதனையை நெருங்கும் ‘கத்தி’ டிரைலர்!

‘ஐ’ டீஸர் சாதனையை நெருங்கும் ‘கத்தி’ டிரைலர்!

செய்திகள் 20-Oct-2014 4:45 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டு வந்தாலும், இன்னும் படத்திற்கான ரிசர்வேஷன் ஆரம்பமாகாதது ‘இளையதளபதி’ ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருக்கிறது. ‘கத்தி’ ரிலீஸ் பிரச்சனைகள் குறித்து போய்க்கொண்டிருந்த பேச்சுவார்த்தைகள் தற்போது முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. எந்த நேரத்திலும் ‘கத்தி’ ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

இந்த சோதனையான நிலைமையிலும், விஜய் ரசிகர்களை ஆறுதல்படுத்துவதுபோல் ‘கத்தி’ டிரைலர் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. நேற்று மாலை 6 மணிக்கு யு&டியூப்பில் வெளியிடப்பட்ட ‘கத்தி’ டிரைலரை கிட்டத்தட்ட 23 மணி நேரத்தில் 9 லட்சத்து 70 ஆயிரம் பேர் பார்த்திருக்கின்றனர். அதோடு இந்த டிரைலரை கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் இதுவரை ‘லைக்’ செய்திருக்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ டீஸரை இதுவரை 78 லட்சம் பேர் பார்த்திருந்தாலும், அதனை ‘லைக்’ செய்திருப்பவர்கள் மொத்தமே 38 ஆயிரம் பேர்தான். ஒரு நாளிலேயே ‘கத்தி’ டிரைலருக்கு 24 ஆயிரம் ‘லைக்’குகள் கிடைத்திருப்பதால் ‘ஐ’ டீஸர் ‘லைக்’ எண்ணிக்கையை ‘கத்தி’ டிரைலர் விரைவில் கடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;