மோகன்லால் புத்தகத்தை வெளியிட்ட கமல்ஹாசன்

மோகன்லால் புத்தகத்தை வெளியிட்ட கமல்ஹாசன்

செய்திகள் 20-Oct-2014 2:05 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் மோகன்லால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பயணம் செய்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி, தொகுத்துள்ளார். ’மோகன்லாலின்டெ யாத்ரகள்’ என்ற பெயரில் மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகத்தை நேற்று கொச்சியில் நடந்த விழாவில் நடிகர் கம்லஹாசன் வெளியிட்டார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘‘நான் இங்கு ஒரு சகலகலா வல்லவனாகவோ, உலகநாயகனாகவோ வரவில்லை, மோகன்லாலின் நண்பராக இங்கு வந்துள்ளேன்’’ என்று குறிப்பிட்டு அந்த புத்தகத்தை வெளியிட்டார். கமல்ஹாசன் வெளியிட்ட இப்புதகத்தின் முதல் பிரதியை பிரபல எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் பெற்றுக் கொள்ள, இவ்விழாவில் இயக்குனர் ப்ரியதர்ஷன், இன்னசன்ட் உட்பட பல மலையாள திரையுலகினர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;