கத்தி - ரிலீஸ் சஸ்பென்ஸ்!

கத்தி - ரிலீஸ் சஸ்பென்ஸ்!

செய்திகள் 20-Oct-2014 11:53 AM IST VRC கருத்துக்கள்

தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட ‘கத்தி’ திரைப்படம் குறித்த சர்ச்சைகள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இப்படத்தின் முன் பதிவு நேற்று முதல் ஆரம்பமாகும் என்று பத்திரிகை விளம்பரங்களில் தகவல் வெளியாகியிருந்த்து. ஆனால் இதுவரையிலும் எந்த தியேட்டரிலும் ரிசர்வேஷன் ஆரம்பிக்கவில்லை. இது சம்பந்தமாக் நாம் ஒரு தியேட்டர் நிர்வாகியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘படம் தீபாவளியன்று ரிலீசாகும் என்ற உறுதியான தகவல் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை, இன்னும் ‘கத்தி’ படம் சம்பந்தமான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது, எப்படியும் இன்று மாலைக்குள் ஒரு முடிவு ஏற்படும்’’ என்று கூறினார். இது ஒரு புறமிருக்க இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், ‘‘நாங்கள் நடிகர் விஜய்க்கோ, இயக்குனர் முருகதாஸுக்கோ எதிரானவர்கள் அல்ல! இப்படத்தை தயாரித்துள்ள ‘லைக்கா’ நிறுவனத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினரும் ஒருவர் என்பதால் தான் இப்படத்தை எதிர்க்கிறோம். அதனால் ‘லைக்கா’ நிறுவன பெயரில் இப்படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம்’’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது சம்பந்தமாக சென்னை போலீஸ் கமிஷனரை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணா சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், லைக்கா நிறுவன டைட்டிலுடன் ‘கத்தி’யை ரிலீஸ் செய்வதாக இருந்தால் ‘கத்தி’ படத்திற்கு பாதுகாப்பு தர மாட்டோம் என்று போலீஸ் கமிஷனர் கூறி இருப்பதாக சில இணைய தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

’கத்தி’ பட பிரச்சனை குறித்து ட்வீட் செய்துள்ள குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அதிபர் ராகேஷ் கௌதம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒரு முடிவு தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை ‘கத்தி’ வெளியாவது குறித்த அதிகாரபூர்வமான எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதால் ‘கத்தி’ திட்டமிட்டபடி தீபாவளியன்று ரிலீசாகுமா என்பது சஸ்பென்சாக இருக்கிறது. இந்த படத்துடன் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட விஷாலின் ‘பூஜை’ படத்திற்கான முன் பதிவு நேற்று துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;