மணி டைட்டில் ஓகே கண்மணி!

மணி டைட்டில் ஓகே கண்மணி!

செய்திகள் 20-Oct-2014 11:08 AM IST VRC கருத்துக்கள்

‘கடல்’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்படைந்துள்ளது. துல்கர் சல்மான், நித்யா மேன்ன் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஓகே கண்மணி’ என்று டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக மணிரத்னம் இயக்கும் படம் என்றால் அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் தான் அவர் டைட்டிலை அறிமுகப்படுத்துவார். ஒரு இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தில் மணிரத்னம் படம் மூலம் அறிமுகமான கனிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;