சர்வதேச திரைப்பட விழாவில் ‘குற்றம் கடிதல்’

சர்வதேச திரைப்பட விழாவில் ‘குற்றம் கடிதல்’

செய்திகள் 20-Oct-2014 10:27 AM IST VRC கருத்துக்கள்

விரைவில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படுவதற்கு தேர்வாகியுள்ள ஒரே படம் ‘குற்றம் கடிதல்’. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 181 இந்திய படங்கள் போட்டியிட்டது. அதிலிருந்து 26 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ் மொழியிலிருந்து தேர்வான ஒரே படம் ‘குற்றம் கடிதல்’ என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா இயக்கியுள்ள இப்படத்தை ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ ஜே.சதீஷ் குமார் தயாரித்துள்ளார். கடந்த வருடம் இவர் தயாரித்து வெளியிட்ட ‘தங்க மீன்கள்’ படம் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றது அனைவருக்கும் தெரியும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - அடி வாடி திமிரா பாடல்


;