நான் வரைந்த திரு.நாகேஷ் ஓவியம் - நடிகர் சிவகுமார்

நான் வரைந்த திரு.நாகேஷ் ஓவியம் - நடிகர் சிவகுமார்

கட்டுரை 19-Oct-2014 12:47 PM IST Krishna கருத்துக்கள்

ஆயிரம் தண்டால் ஆஞ்சநேயர் முன் பள்ளி நாட்களில் எடுத்தவர். 400 அடி நீள தெப்பக்குளத்தில் ஒரு முனையில் மூழ்கி மறுமுனையில் ஒரு நிமிடத்தில் தொட்டவர். கல்லூரியில் படிக்கையில் பெரியம்மை தாக்கியதில் முகம் கோரமாக உள்ளதென்று தற்கொலை செய்ய முயன்றவர். கல்யாணம் , காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், நீலப்படுதா கட்டி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். சினிமா வாய்ப்புக்காக எந்த தயாரிப்பாளரைப் போய்ப் பார்த்தாலும் 'ஏம்பா உன் வீட்டுல கண்ணாடியே இல்லையா' என்று அவமானப்படுத்தப் பட்டவர்.

அறுபதுகளில் அவர் ஏறாத நாடக மேடைகளே இல்லை. நகைச்சுவையில் உச்சம் தொட்டவர். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் தவிர்க்க இயலாத நகைச்சுவை நடிகர். பெட்டி நிறைய பணம் சேர்த்து, அம்மாவை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கலாம் என்று செல்லும்முன்னே, அம்மா மயானம் அடைந்த செய்தி அறிந்து மூர்ச்சையானார். சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நேரம், சொந்தங்கள் அனைத்தும் சிறை சென்ற போதும், கலங்காமல் தொழிலில் கவனம் செலுத்தினார். பாலசந்தரால் நவரசங்களையும் நடிப்பில் வெளிப்படுத்திய கலைஞன் - நாகேஷ் அவர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;