கார்த்தி - நாகார்ஜுனா இணையும் படம்!

கார்த்தி - நாகார்ஜுனா இணையும் படம்!

செய்திகள் 18-Oct-2014 1:15 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தியின் ‘மெட்ராஸ்’ சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்க, அடுத்து ‘கொம்பன்’ படத்தில் நடித்து வரும் கார்த்தி, ‘பிவிபி சினிமா’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ நாகார்ஜுனாவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகவிருக்கும் இப்படத்தை வம்சி இயக்குகிறார்.‘பிருந்தாவனம்’,‘யவடு’ உட்பட பல தெலுங்கு வெற்றிப் படங்களை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாகார்ஜுனா தமிழிலும் பிரபலமானவர் என்பதைப் போல, கார்த்தி தெலுங்கு சினிமாவிலும் பிரபலமானவர் என்பதால் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையப் போகிறது. இப்படத்தின் டைட்டில், மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞ்ரகளின் விவரங்கள் விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;