குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கும் 3டி ஹாரர் படம்!

குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கும் 3டி ஹாரர் படம்!

செய்திகள் 18-Oct-2014 12:44 PM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக ஹாரர் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் தான் இப்போது நிறைய திகில் படங்கள் உருவாகி வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ‘அரண்மனை’ படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் நேற்று ஹிந்தியில் வெளியாகியுள்ள ‘MUMBAI 125 KM’ என்ற 3டி படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் உருவாகியுள்ள ஹாரர் படம் இதுதானாம்! ஹேமந்த் மதுக்கர் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்கு ‘ஸ்பைடர்மேன்’ ஹாலிவுட் படத்தில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இப்படத்தில் அதி பயங்கர திகில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால இப்படத்தை பார்க்க குழந்தைகள், பலவீனமான இதயம் கொண்டவர்கள், மற்றும் கர்பிணிப் பெண்களுக்கு அனுமதி இல்லையாம். கரன்விர் பொஹ்ரா, வீணா மாலிக் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை அமைத்திருப்பவர் பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ள மணி சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;