‘வீர’த்தை மிஞ்சும் சந்தானம்!

‘வீர’த்தை மிஞ்சும் சந்தானம்!

செய்திகள் 18-Oct-2014 11:24 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சிவா இயக்கிய ‘வீரம்’ படத்தில் அஜித்துடன் சந்தானமும் நடித்திருந்தார். இப்படத்தில் சந்தானத்திற்கு சிறிய கேர்கடர் தான் தரப்பட்டிருந்தது. ஆனால், சிவா அடுத்து இயக்கும் படத்தில் சந்தானத்திற்கு அஜித்துடன் படம் முழுக்க வருவதுமாதிரியான கேரக்டரை உருவாக்கியிருக்கிறாராம். இப்படத்தின் மூலம் அஜித்துடன் ஹன்சிகா மோத்வானி ஜோடி சேர இருக்கிறார் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது என்றும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வர் சுந்தரம் - டீசர்


;