ஜோதிகாவுக்கு இன்று பிறந்த நாள்!

ஜோதிகாவுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 18-Oct-2014 10:31 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் கதாநாயகி நடிகைகளை எடுத்துக் கொண்டால் அதில் நடிகை ஜோதிகாவுக்கு தனி ஒரு இடம் உண்டு! 1999-ஆம் ஆண்டு ‘வாலி’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஜய், அஜித், விக்ரம் என தமிழ் சினிமாவின் எல்லா முன்னணி நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து, அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடத்தைப் பிடித்தவர்! நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை! அவர் எப்போது மீண்டும் நடிக்க வருவார் என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக, சமீபத்தில் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் ரீ-மேக்கில் அவர் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானதும் அவரது ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையிருக்காது! இப்படி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்போடு மீண்டும் படங்களில் நடிக்க இருக்கும் ஜோதிகாவுக்கு இன்று பிறந்த நாள்! லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ஏராளமான திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் ஜோதிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொலவதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;