விஜய் 58: ஒளிப்பதிவாளர் ‘நட்டி’யின் ட்வீட்!

விஜய் 58: ஒளிப்பதிவாளர் ‘நட்டி’யின் ட்வீட்!

செய்திகள் 17-Oct-2014 4:32 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ ரிலீஸிற்கு இன்னும் 5 நாட்களே மீதமிருக்கின்றன. இந்நிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தைப் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியிருக்கின்றன. விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமாரும், ‘தமீன் ரிலீஸி’ன் ஷிபுவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நாயகிகளாக நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் இப்படத்தில் ‘நான் ஈ’ சுதீப்பும், நடிகை ஸ்ரீதேவியும் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் நடிக்கவில்லை என தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒளிப்பதிவை ‘சதுரங்க வேட்டை’ புகழ் நடராஜும், இசையை தேவி ஸ்ரீ பிரசாத்தும் கவனிக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருப்பதாகவும், அதற்காக சென்னை ஈசிஆரில் பிரம்மாண்டமான செட் ஒன்றை கலை இயக்குனர் முத்துராஜ் உருவாக்கி வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவாளர் ‘நட்டி’ நடராஜ், ‘‘என்ன ஒரு கலை இயக்குனர்... அற்புதம் மிஸ்டர் முத்துராஜ்!’’ என ட்வீட்டியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;