சுனாமி, எபோலா… கமலின் தீர்க்க தரிசனம்!

சுனாமி, எபோலா… கமலின் தீர்க்க தரிசனம்!

செய்திகள் 17-Oct-2014 4:13 PM IST VRC கருத்துக்கள்

தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய் ‘எபோலா வைரஸ் நோய்’. இந்த எபோலா வைரஸ் குறித்து 6 வருடங்களுக்கு முன்பே நமது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் அவரது கதாபார்த்திரம் மூலம் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் அமெரிக்க பயோ டெக்னாலஜி ஆராய்ச்சி கூடத்தில் உருவாக்கும் பயோ வெப்பன், மார்பர்க் வைரஸ் மற்றும் எபோலா வைரஸ் சேர்ந்த கலவையாக தான் சித்தரிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த ‘எபோலா வைரஸ்’ உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பும் கமல்ஹாசன் நடித்த சில படங்களில் வந்த சில விஷயங்கள் நிஜமாகியுள்ளன. அவர் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் சுனாமி குறித்த ஒரு தகவல் இடம் பெற்றிருக்கும். அப்போது சுனாமி என்றால் என்ன என்று பெரும்பாலானோருக்கும் தெரியாது, அதற்கு பிறகு 2004 -ஆம் ஆண்டு சுனாமி வந்து நம் நாட்டையே சின்னா பின்னமாக்கியது. இதை போன்று கமல்ஹாசன் நடித்த ‘ஹே ராம்’ படத்தில் மனித கலவர காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் குஜராத் மாநிலத்தில் பெரும் மனித கலவரம் ஏற்பட்டு பல மனிதர்கள் மாண்டனர். இன்னொரு சம்பவமாக கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் சைக்கோ கில்லர் மாதிரி ஒரு கேரக்டர் இடம் பெற்றிருக்கும். இந்த படம் வெளியான சில மாதங்களிலேயே அதிலுள்ள சைக்கோ கில்லர் கேரக்டரை நிஜமாக்கும் விதமாக டெல்லி நொய்டாவில் தொடர் கொலைக்காரர்களான மொனிதர்- சதீஷ் கொலை விவகாரங்கள் வெளிவந்து அது நாட்டையே உலுக்கியது. இப்படி கமல் நடித்த பல படங்களில் வந்த விசித்திரமான சில விஷயங்கள நிஜத்திலும் நடைபெற்றுள்ளது குறிப்பிட்த்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;