ஹாலிவுட் ஸ்டைலில் வெற்றிமாறன் இயக்கும் படம்!

ஹாலிவுட் ஸ்டைலில் வெற்றிமாறன் இயக்கும் படம்!

செய்திகள் 17-Oct-2014 3:34 PM IST VRC கருத்துக்கள்

‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம் ‘சூதாடி’. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்பாக ‘விசாரணை’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வெளியிட முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன். ‘சூதாடி’ படத்தை தயாரிக்கும் தனுஷே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். இந்த படம் வழக்கமான படங்களைப்போல் இல்லாமல், ஹாலிவுட் படங்களை போல் ஒரு மணி, ஒன்றரை மணிநேரத்துக்குள் முடியும் படமாம். இந்த படம் குறித்த தகவல்கள் ஓரிரு மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்தது என்றாலும் இப்போது தான் நடிகர், நடிகைகள் எல்லாம் தேர்வாகி படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளனர். இந்தப் படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் கதையின் நாயகனாக நடிக்க, ‘பொறியாளன்’ மற்றும் ‘கயல்’ பட ஹீரோயின் ஆனந்தி கதையின் நாயகியாக நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;