பிரபல ஒளிப்பதிவாளர் கவலைக்கிடம்!

பிரபல ஒளிப்பதிவாளர் கவலைக்கிடம்!

செய்திகள் 17-Oct-2014 2:58 PM IST VRC கருத்துக்கள்

‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘மன்னன்’ உட்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்கள் மற்றும் தெலுங்கு படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் அஷோக் குமார். இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான இவருக்கு தேசிய விருது, தமிழக அரசு விருது, கேரள அரசாங்க விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளன. ‘அன்று பெயத மழையில்’ உட்பட சில தமிழ் படங்களை இயக்கியும் உள்ள அஷோக் குமார் கடந்த சில மாதங்களாக நோய்வாய்பட்டு சென்னை மற்றும் ஹைதராபாதிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இப்போது அந்த சிகிச்சைகள் பலன் அளிக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் அவரை வீட்டில் வைத்து பராமரித்து கொள்ளும் படி மருத்துவர்கள் கூறி இருப்பதால், அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் அஷோக் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் அவருக்கு அனைத்து வகையிலான உதவிகளையும் செய்த திரையுலகை சேர்ந்த அத்தனை பேருக்கும் அவர் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாக கூறி ஒரு பத்திரிகை செய்தியை அனுப்பியுள்ளார் அஷோக் குமாரின் மகன் ஆகாஷ் அசோக் குமார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;