‘கத்தி’ டீமிலிருந்து புதிய அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘கத்தி’ டீமிலிருந்து புதிய அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 17-Oct-2014 1:04 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’யின் டிரைலருக்காக ரசிகர்கள் தவியாய் தவித்துக் கொண்டிருக்க, அதைத் தவிர்த்து என்னென்னமோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்று இரவு ‘கத்தி’ படத்தின் ‘ஆத்தி...’ பாடல் டீஸர் வெளியிடப்பட்டது. இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை ‘கத்தி’யின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது...

‘‘பாடல் டீஸருக்கு கொடுத்த வரவேற்பிற்கு நன்றி! ‘கத்தி’ டிரைலர் ரிலீஸ் தேதியை இன்னமும் முடிவு செய்யவில்லை. அதிகாரபூர்வமாக முடிவு செய்யப்பட்டதும் இந்த பக்கத்தில் நாங்களே அது குறித்து தெரிவிக்கிறோம். ரசிகர்களின் நீண்ட காத்திருப்பை நாங்கள் புரிந்து கொள்கிறோம்... படத்திற்கு நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி.

தவிர, ‘கத்தி’ கேம் பற்றி நிறைய ‘அப்டேட்’ செய்து வருகிறோம். 3டி கேம் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 2டி கேமும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஐபோனு’க்கான கேம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.’’


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;