தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இன்னொரு சரவணன்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இன்னொரு சரவணன்!

செய்திகள் 17-Oct-2014 1:03 PM IST VRC கருத்துக்கள்

44 படங்களுக்கும் மேல் புரொடக்‌ஷன் மேனேஜராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற முருகானந்தம் இயக்கியுள்ள படம் ‘முருகாற்றுபடை’. ‘சிகரம் விஷுவல் மீடியா’ நிறுவனம் சார்பில் ரவி தயாரித்திருக்கும் இப்படத்தில் அவரது புதல்வர் சரவணன் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அவரது மகளாக நடித்த நாவிகா இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக ஆரிமுகமாகிறார். வீணை எஸ்.பாலச்சந்தரின் பேரன் கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது. ஆடியோவை தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா வெளியிட, பழம்பெரும் நடிகர் வி.ஏஸ்.ராகவன் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரமேஷ்கண்ணா பேசும்போது. ‘‘ இந்த படத்தின் ஹீரோவின் பெயர் சரவணன். அவருடன் நானும் இந்தப் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த சரவணனுடைய உழைப்பை பார்க்கும்போது, சினிமாவில் வெற்றி பெற்றுள்ள அந்த சரவணனை (நடிகர் சூர்யா) போன்று இவரும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது’’ என்றார். இதனை தொடர்ந்து பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், ‘‘படத்தின் பாடல்களையும், டிரைலரையும் பார்த்தபோது இந்தப் படக்குழுவினரின் உழைப்பு தெரிந்தது. இப்படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

R K நகர் - டீசர்


;