‘தல 55’ பாடல்களின் முழுமையான ரிப்போர்ட்!

‘தல 55’ பாடல்களின் முழுமையான ரிப்போர்ட்!

செய்திகள் 17-Oct-2014 11:57 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தற்போது படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இன்னொருபுறம் ஹாரிஸ் ஜெயராஜ், அஜித்திற்காக சூப்பர் பாடல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். மீண்டும் கௌதம் மேனனுடன் இணைந்திருப்பது, அஜித்திற்கு முதல்முறையாக இசையமைப்பது என பல சிறப்புகள் ‘தல55’ படத்தில் அவருக்கு இருப்பதால் பாடல்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி வருகிறாராம்.

இப்படத்திற்காக கவிஞர் தாமரையின் வரிகளில் மொத்தம் 5 பாடல்களை உருவாக்கியிருக்கிறார் ஹாரிஸ். அதில் ஒன்று தாலாட்டுப் பாடல். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் வட இந்தியாவில் படமாக்கப்பட்டது.

இன்னொரு பாடலில்..
‘‘ஒரு வெள்ளிக் கொலுசுபோல
இந்தப் பூமி சிணுங்கும் கீழ...
அணியாத வைரம் போல
அந்த வானம் மினுங்கும் மேல...’
என்ற அற்புதமான வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பாடலில் அஜித்தின் நடனம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் என்று கூறியிருக்கிறார் கௌதம்.

மற்றொரு பாடல் அஜித், த்ரிஷா இடம்பெறும் மெலடி டூயட் ரகம்.
‘‘மழை வரப்போகுது
துளிகளும் தூறுது...
நனையாமல் என்ன செய்வேன்?
மதுரமும் ஊறுது
மலர்வனம் மூடுது...
தொலையாமல் எங்கே போவேன்..?’’ என்ற வரிகள் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

நான்காவது பாடல் அஜித்திற்கான அறிமுகப் பாடல். ‘‘அதாரு அதாரு... உதாரு உதாரு...’’ எனத் தொடங்குமாம் இந்தப்பாடல். 5வது பாடல் என்ன ரகம் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் ஹாரிஸ்.

மொத்தத்தில் ‘தல55’ கண்களுக்கு மட்டுமல்ல, காதுகளுக்கும் விருந்து படைக்கப்போவது நிச்சயம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;