தனுஷ் படத்தில் நடிக்க அருமையான வாய்ப்பு!

தனுஷ் படத்தில் நடிக்க அருமையான வாய்ப்பு!

செய்திகள் 17-Oct-2014 11:44 AM IST Chandru கருத்துக்கள்

நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘காக்கிச்சட்டை’ படத்தை தயாரித்து வருகிறது. இதன் அடுத்த படைப்பாக விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘நானும் ரௌடிதான்’ படம் விரைவில் துவங்கவிருக்கிறது. ‘போடா போடி’ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்திற்கு இசை அனிருத், ஒளிப்பதிவு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், எடிட்டிங் ஆண்டனி. இப்படத்தில் நடிப்பதற்கான துணை நடிகர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. புதுமுகங்களையும் இப்படத்தில் பயன்படுத்த முடிவு செய்திருக்கும் தனுஷ், நடிக்க விருப்பமுள்ளவர்களை அழைத்திருக்கிறார். எந்த வயதினராக இருந்தாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பமிருப்பவர்கள், casting.nrdthemovie@gmail.com என்ற மெயில் ஐடிக்கு உங்களது போட்டோ, பயோடேட்டா ஆகியவற்றை அனுப்பி வைக்கவும்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;