4 பாட்டு ரெடியானால் சிம்புவுக்கு 2 படம் ரிலீஸ்!

4 பாட்டு ரெடியானால் சிம்புவுக்கு 2 படம் ரிலீஸ்!

செய்திகள் 17-Oct-2014 10:41 AM IST Chandru கருத்துக்கள்

சரியாகச் சொல்ல வேண்டுமானால் சிம்பு படம் வெளிவந்து முழுதாக 23 மாதங்கள் ஓடிவிட்டன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘போடா போடி’ திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு கடந்த வருடம் அவர் கெஸ்ட் ரோலில் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படமும், இந்த வருடம் மீண்டும் கெஸ்ட் ரோலில் அவர் நடித்த ‘இங்க என்ன சொல்லுது’ படமும் வெளிவந்தது.

இப்போது விஜய் சந்தர் இயக்கத்தில் ‘வாலு’, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’, கௌதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்று என மொத்தம் 3 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. இதில் ‘வாலு’ படத்தில் ஒரே ஒரு பாடலும், ‘இது நம்ம ஆளு’ படத்தில் 3 பாடல்களும்தான் இன்னும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். இந்த 4 பாடல்கள் முடிந்துவிட்டால் சிம்புவின் கையில் 2 படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகிவிடும்.

தற்போது அஜித்தை வைத்து கௌதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் படம் முடிவடைந்ததும் சிம்பு படத்தை துவங்கவிருக்கிறார். அனேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;