நான் நலமாக இருக்கிறேன்! - கமல் அறிக்கை

நான் நலமாக இருக்கிறேன்! - கமல் அறிக்கை

செய்திகள் 17-Oct-2014 10:10 AM IST Chandru கருத்துக்கள்

கமல் பற்றி அவ்வப்போது பரபரப்பாக எதையாவது எழுதிக் கொண்டே இருருக்கிறார்கள். சமீபத்தில் ஃபுட் பாய்சனுக்காக மருத்துவமனைக்குச் சென்ற கமலை, ‘நெஞ்சு வலி’க்காக கமல் மருத்துவமனையில் அனுமதி என தவறாக செய்திகள் வெளிட்டனர். தற்போது ரப்பர் டியூப் ஒன்று கமலின் மூச்சுக்குழலில் சிக்க, மூச்சுவிட அவதிப்பட்டு வருகிறார் கமல் என நேற்று பல இணையதளங்களிலும் செய்திகள் வெளியாகின. அதாவது ‘பாபநாசம்’ படப்பிடிப்பின்போது கலாபவண் மணி கமலை தாக்கிய காட்சி ஒன்றில் அவருடைய மூக்கில் அடிபட்டு, பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த ரப்பர் துண்டு மூக்கிற்குள் சென்று, மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை மறுத்துள்ள கமல் தற்போது விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

‘‘இதற்கு முன்பும் எனக்கு பல வியாதிகளை உருவாக்கினார்கள்... அதற்கெல்லாம் நான் உடனடியாக விளக்கம் கொடுக்கவே எல்லாம் சரியாகிப் போனது. நான் படப்பிடிப்பின்போது அடிபட்டதாக தற்போது வரும் செய்திகள் உண்மையல்ல. மேக்அப்பிற்காக பயன்படுத்தப்படும் செயற்கை ரப்பர் என் மூக்குத் துவாரத்திற்குள் சென்றுவிட, மருத்துவர்களின் மேற்பார்வையில் அது கவனமாக அகற்றப்பட்டுவிட்டது. இது ஒரு சண்டைக்காட்சி... அதற்காக முகத்தில் காயங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டன. காயங்கள் உள்ள முகத்துடனே நான் மருத்துவமனைக்குச் செல்ல, செய்திகள் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டன. நான் நன்றாக இருக்கிறேன்!’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;