‘1000’ படத்தில் நடிக்கும் பரத்!

‘1000’ படத்தில் நடிக்கும் பரத்!

செய்திகள் 17-Oct-2014 10:06 AM IST Chandru கருத்துக்கள்

தனது 25வது படமான ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்தைத் தொடர்ந்து தற்போது தமிழில் ‘ஏழு கடல் தாண்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பரத். அதோடு தற்போது புதிய மலையாள படமொன்றில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘1000’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மலையாள நடிகர்கள் மக்பூல் சல்மான், பியோன் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார் பரத். 1000 ரூபாய் நோட்டு ஒன்றால் இணைக்கப்படும் பலரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.சி.நாயர். திருவனந்தபுரம், தொடுபுலா உள்ளிட்ட இடங்களில் விரைவில் ‘1000’ படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

பரத் கடைசியாக மோகன்லாலுடன் இணைந்து ‘கூதரா’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

களவாடிய பொழுதுகள் - டிரைலர்


;