தமிழ் சினிமாவில் புதிய முயற்சி!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி!

செய்திகள் 17-Oct-2014 9:58 AM IST VRC கருத்துக்கள்

‘கேள்விக்குறி’ என்ற படத்தில் ஹீரோவக நடித்து, அப்படத்தை இயக்கவும் செய்தவர் ஜெய்லானி. இவரும் சமீபத்தில் வெளியான ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தை இயக்கிய முத்துராமலிங்கனும் இணைந்து ‘மூவி ஃபண்டிங் நெட்வொர்க்’ என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் நோக்கம், திரைப்படங்களை தயாரிப்பது தான்! இந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களில் யார் வேண்டுமானாலும் பங்குதாரர்கள் ஆகலாமாம். அதாவது குரூப் ஃபண்டிங் (பல பேர் முதலீட்டில்) முறையில் திரைப்படங்களை தயாரிக்கும் வழக்கம் வெளிநாடுக்ளில் இருந்து வருகிறது என்றும், அது இந்தியாவில் அவ்வளவு பிரபலமாகவில்லை என்றும் கூறுகிறார் ஜெய்லானி. கன்னட்த்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘லூசியா’ மற்றும் ஹிந்தியில் வெளியான ‘முனீர்’ ஆகிய படங்கள் இந்த முறையில் உருவாகி வெற்றிப் பெற்ற படங்களாம்!

இதே தயாரிப்பு முறையை பின்பற்றி தமிழ் திரைப்படங்களை தயாரிப்பதே ‘மூவி ஃபண்டிங் நெட்வொர்க்’கின் திட்டமாம். இதன் அடிப்படையில் இந்நிறுவனம் முதலில் இரண்டு படங்களை தயாரிக்கிறது. அதில் ஒரு படம் ‘சவுண்ட் கேமரா ஆக்‌ஷன்’. இப்படத்தை ஜெய்லானி இயக்குகிறார். இன்னொரு படம் ‘ரூபச்சித்திர மாமரத்துக்கிளியே’. இதனை முத்துராமலிங்கன் இயக்குகிறார். இதுதவிர மேலும் பல படங்களை தயாரிக்கும் நோக்கத்துடன் இந்நிறுவனம் ஒரு திரைக்கதை போட்டியை நடத்தியுள்ளது. இதில் கிட்டத்தட்ட 150 திரைக்கதைகள் போட்டியிட்டுள்ளன. அதிலிருந்து சிறந்த 5 திரைக்கதைகள் மற்றும் 5 குறும்பட கதைகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளனர். இந்த கதைகளும் இந்த நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் ஆகவிருக்கிறதாம்.

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஜீ.வி.ஃபிலிம்ஸ், பிரமிட் சாய்மீரா உட்பட பல நிறுவனங்கள் இதுபோனற் முயற்களில் ஈடுப்பட்டுள்ளது. ஆனால் அந்நிறுவனங்களால் வெற்றிபெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்துராமலிங்கம் - டிரைலர்


;