வதந்திகளை நம்ப வேண்டாம்... ‘கத்தி’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

வதந்திகளை நம்ப வேண்டாம்... ‘கத்தி’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 16-Oct-2014 3:09 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் டிரைலர் குறித்து வரும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘கத்தி’யின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில்...

‘‘கடந்த சில நாட்களாக ‘கத்தி’ டிரைலர் வெளியீடு குறித்த பல செய்திகள், பல்வேறு இணைதளங்களிலும், ஃபேஸ்புக் பக்கங்களிலும் வெளியாகி வருகின்றன. எது எப்படியோ... டிரைலர் குறித்த எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. அதேபோல், இன்று இரவு (அதாவது நேற்று அக் 15) டிரைலர் வெளியீடு என்ற செய்தியை வெளியிட்ட பக்கத்தை (இவர்கள் குறிப்பிடுவது ஐயங்கரன் இன்டர்நேஷனல் என்ற பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் பக்கத்தை) எப்போதும் நாங்கள் அதிகாரபூர்வமான பக்கம் என அறிவித்ததில்லை. ‘கத்தி’ பற்றிய எந்த அதிகாரபூர்வ அறிவிப்பாக இருந்தாலும், அது முதலில் இந்த பக்கத்திலேயே வெளியிடப்படும். தயவுசெய்து எங்களது பக்கத்தில் வெளியிடப்படாத ‘கத்தி’ குறித்த எந்த அறிவிப்பையும் அதிகாரபூர்வ தகவலாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

இன்னொருபுறம்... நாளை (அக் 16) விருந்து படைக்கும் வகையில் உங்களுக்கு பரபரப்பாக பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். ஆம்... ‘கத்தி’யின் பாடல் டீஸர் ஒன்றை வெளியிடவிருக்கிறோம். உங்கள் கண்களுக்கு விருந்தாக்க எங்களின் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறோம். உங்களுடைய ஆதரவுக்கும், உதவிகளுக்கும் நன்றி. இந்த தீபாவளி நிச்சயம் மறக்க முடியாத ஒரு நாளாக அமையும்!
நன்றி
கத்தி குழு’’

என்று பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;