‘கத்தி’க்காக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தனுஷ்!

‘கத்தி’க்காக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தனுஷ்!

செய்திகள் 16-Oct-2014 3:03 PM IST VRC கருத்துக்கள்

இந்த வருட தீபாவளிக்கு விஜய்யின் ‘கத்தி’, விஷாலின் ‘பூஜை’ ஆகிய இரண்டு படங்கள் தான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இதில் விஜய்யின் ‘கத்தி’யை ரசிகர்கள் மட்டுமல்லாமல் மொத்த திரையுலகமே பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மீண்டும் இணைந்துள்ள விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மட்டுமல்ல, இதனை தயாரித்திருக்கும் ‘லைக்கா’ நிறுவனமும் கூட தான்! விஜய்யின் ‘கத்தி’யை காண பெரிதும் ஆவலாய் காத்திருப்பவர்களில் நடிகர் தனுஷும் ஒருவர்! இது குறித்து அவர் ட்வீட்டியிருப்பதில் ‘‘கத்தி’யின் முதல் நாள், முதல் காட்சிக்கு இன்னும் 5 நாட்கள் தான்! காத்திருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;