‘கத்தி’ டிரைலர் : ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

‘கத்தி’ டிரைலர் : ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

செய்திகள் 16-Oct-2014 11:38 AM IST Chandru கருத்துக்கள்

தீபாவளிக்கு படம் வெளிவருவதை உறுதிசெய்த பின்பும்கூட ‘கத்தி’ படத்தின் முழுநீள டிரைலர் எப்போது வரும் என யாருக்கும் தெரியவில்லை. முதலில்... கடந்த வெள்ளிக்கிழமை ‘கத்தி’ வெளியாகும் என்று பல இணையதளங்களிலும் செய்தியானது. ரசிகர்களும் அதைநோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். பின்னர், ‘கத்தி’ படம் சென்சாரில் இருந்ததால், அதை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு 12.00 மணிக்கு ‘கத்தி’ டிரைலர் வெளியாகும் என ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் யூகங்கள் கிளம்பின. ஆனால், ரசிகர்கள் தூங்காமல் காத்திருந்ததுதான் மிச்சம்... அன்றும் டிரைலர் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இன்று (அக் 16) அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (அக் 15) இரவு 12.00 மணிக்கு டிரைலர் வெளியாகும் என மீண்டும் காத்திருக்கத் தொடங்கினார்கள் ரசிகர்கள். ஆனால், இப்போதும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதுவரை டிரைலரைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் தனது ட்விட்டரில் டிரைலரைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

‘கத்தி’யின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘ஐயங்கரன் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கிலிருக்கும் ஒரு பக்கத்தில் ‘கத்தி’ டிரைலர் நேற்று வெளியாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டது (அது அதிகாரபூர்வ பக்கமா என்பது தெரியவில்லை). இதை நம்பி பல இணையதளங்களும் டிரைலர் ரிலீஸ் என்ற செய்தியைப் பரப்பினார்கள். ஆனால், இன்று சில பிரச்சனைகளால் டிரைலர் வெளியாகவில்லை என மீண்டும் தெரிவித்திருக்கிறது அந்தப் பக்கம். இப்படி அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிப்பதற்கு முன்பாக, பலரும் பல செய்திகளை வெளியிட ரசிகர்கள் குழப்பதிலும், ஏமாற்றத்திலும் இருக்கிறார்கள்.

‘கத்தி’ படம் வெளியாவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், இதுபற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருதாஸாவது ஏதாவது அறிவிப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என ‘இளையதளபதி’ ரசிகர்கள் ரொம்பவே வெயிட்டிங்...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;