சிவகார்த்திகேயனின் ‘காக்கிச்சட்டை’ ரகசியங்கள்!

சிவகார்த்திகேயனின் ‘காக்கிச்சட்டை’ ரகசியங்கள்!

செய்திகள் 16-Oct-2014 11:06 AM IST Chandru கருத்துக்கள்

‘அது இது எது’ என பிரபலங்களை கலாய்த்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் ‘3’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து, ‘மெரினா’வில் ‘எதிர்நீச்சல்’ அடித்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில் பட்டை முருகனாக மாறி, ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தின் தலைவர் போஸ் பாண்டியாக பதிவியேற்று, ‘மான் கராத்தே’வில் பீட்டராக மாறி கைகளுக்கு ‘பாக்ஸிங்’ க்ளவ்ஸ் மாட்டிக் கொண்டார். இப்போது.... கிரைம் பிராஞ்ச் ஆபிஸர் மதிமாறனாக யூனிஃபார்மில் வந்து மிரட்டப்போகிறார்... அவரின் அடுத்த படம் ‘காக்கிச்சட்டை’!

‘எதிர்நீச்சல்’ இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் சிவாவுடன் மீண்டும் இணைகிறார் ‘விவிஎஸ்’ ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. ‘திவ்யா’ என்பதுதான் இப்படத்தில் அவரின் கேரக்டர் பெயராம். கூடவே சிவா படத்தில் முதல்முறையாக காமெடிக்கு இமான் அண்ணாச்சி களமிறக்கப்பட்டிருக்கிறார். தனுஷ் தயாரிக்கும் இப்படத்தில் சிவாவின் சீனியர் ஆபிஸராக நடித்திருக்கிறார் பிரபு. ஆக்ஷன் படமாக இருந்தாலும், வழக்கம்போல் சிவகார்த்திகேயனின் சரவெடி காமெடிகள் படம் முழுக்க இருக்குமாம். இப்படத்திற்காக 5 கிலோ எடையைக்கூட்டுவதற்கு படாதபாடு பட்டாராம் சிவகார்த்திகேயன்.

படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கிறது ‘காக்கிச்சட்டை’ டீம்! அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;