பிறந்தநாள் கேக்கை வெட்டும் அனிருத்தின் ‘கத்தி’!

பிறந்தநாள் கேக்கை வெட்டும் அனிருத்தின் ‘கத்தி’!

செய்திகள் 16-Oct-2014 10:03 AM IST Chandru கருத்துக்கள்

3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி என மொத்தம் இசையமைத்திருப்பது 6 படங்கள்தான் (டேவிட், இரண்டாம் உலகம் படங்களில் ஒரு சில பாடல்கள் மட்டுமே). ஆனால், அந்த 6 ஆல்பங்களுமே ‘ஐ ட்யூன்ஸி’ன் டாப் 10 லிஸ்ட்டில் இடம் பிடிக்க வைத்திருக்கும் சாதனை இசையமைப்பாளர் அனிருத்திற்கு இன்று பிறந்தநாள்! இதற்கு முன்பு தன் பிறந்தநாள் கேக்கை வெட்டுவதற்கு எத்தனையோ முறை அனிருத் ‘கத்தி’யை கையில் எடுத்திருப்பார். இந்தமுறை... அவர் கைகள் ‘கத்தி’யைத் தொடும்போது நிச்சயம் அது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அவரின் இசையில் ‘கத்தி’ ஆல்பம் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்க, தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ‘கத்தி’ படத்தில் அவரின் பின்னணி இசையைக் கேட்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். தொடர்ந்து அவரின் ஆல்பங்கள் வெற்றியைப் பெறட்டும்!

‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிருத்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;